பலதும் பத்தும்

கோழியின் இந்த 5 பகுதிகளை தவறிக்கூட சாப்பிடாதீர்கள்!

சிக்கன் விரும்பி சாப்பிடுவோர், கோழியின் இந்த 5 பாகங்களைச் சாப்பிடுவது உடலில் உள்ள ஹார்மோன்களைச் சீர்குலைத்து, புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கின்றனர் வைத்தியர்கள். முழு விவரங்களையும் இங்கே காண்க,

அசைவப் பிரியர்களில் சிக்கன் பிடிக்காதவர்கள் மிகச் சிலரே. அதற்கு முக்கிய காரணம், அதன் சுவை. கூடவே, வாரத்திற்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று முறையாவது சிக்கன் பிரியாணி அல்லது சிக்கன் கறி சாப்பிட வேண்டும் என்கின்றனர் வைத்தியர்கள் காரணம், அதிலுள்ள புரதச்சத்து. என்னதான் சிக்கன் சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லது என்றாலும், கோழியின் உடலின் சில பகுதிகளை அறவே சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஏனெனில் அந்தப் பகுதிகளில்தான் அபாயகரமான பாக்டீரியாக்கள், ஒட்டுண்ணிகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் அதிக அளவில் குவிகின்றனவாம். அவை என்னென்ன, சிக்கனில் நாம் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டிய அபாயகரமான பகுதிகள் என்னென்ன என்று இங்கே பார்ப்போம்.

1. கோழி நுரையீரல் – சிக்கன் சமைக்கும் போது பலர் நுரையீரல் பகுதிகளையும் சேர்த்து விடுகிறார்கள். ஆனால், அதில் ‘தெர்மோபிலிக் பாக்டீரியா’ எனப்படும் ஒரு வகையான நுண்ணுயிரிகள் மிக அதிகமாக இருக்கும். இந்த பாக்டீரியா எவ்வளவு அதிக வெப்பத்தில் வேகவைத்தாலும் முழுமையாக அழியாது. எனவே இதனை சாப்பிடுவதால் உடலில் கடுமையான தொற்றுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஆகவே இவற்றை தவிர்ப்பதே நல்லது.

2. கோழியின் இரைப்பை – கோழியின் செரிமான மண்டலத்தின் இந்தப் பகுதி, கோழி உண்ணும் உணவுக் கழிவுகளைச் சேமித்து வைக்கிறது. இதைச் சரியாகச் சுத்தம் செய்யாமல் உண்டால், அதில் உள்ள பல்வேறு ஒட்டுண்ணிகளும் பாக்டீரியாக்களும் நேரடியாக நம் உடலுக்குள் நுழையக்கூடும். இது கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் உணவு நஞ்சாதல் போன்ற செரிமானப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். ஆகவே முடிந்தவரை இவற்றை தவிர்ப்பதே நல்லது.

3. கோழித் தலை – பலர் கோழித் தலைகளைச் சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் இப்போதெல்லாம், கோழிகள் வேகமாக வளரவும் நோய்களைத் தடுக்கவும் அவற்றுக்கு பல்வேறு ஹார்மோன் ஊசிகளும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளும் கொடுக்கப்படுகின்றன. கோழிகளுக்குக் கொடுக்கப்படும் இந்த இரசாயனங்கள் அனைத்தும் அவற்றின் தலைகளிலும் மூளையிலும் சேரும். எனவே, கோழித் தலைகளைச் சாப்பிடுவதால் அந்த நச்சு இரசாயனங்கள் நம் உடலுக்குள் நுழைந்து, ஹார்மோன் சமநிலையின்மையையும், நீண்ட காலப் போக்கில் புற்றுநோய் போன்ற நோய்களையும் ஏற்படுத்தக்கூடும்.

4. கோழித் தோல் – தோலுடன் கோழியை சமைப்பது குழம்பை மிகவும் சுவையாகவும் சாறு நிறைந்ததாகவும் ஆக்குகிறது. ஆனால் கோழித் தோலில் நிறைவுற்ற கொழுப்பு (உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கொழுப்பு) நிறைந்துள்ளது. இந்தத் தோலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு, உடலில் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. இது இதய நோய், பக்கவாதம் மற்றும் உடல் பருமன் போன்ற உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.

5. கோழி வால் – கோழியின் வாலில் சுரப்பிகள் நிறைந்துள்ளன. இங்கு கழிவுகளும் பாக்டீரியாக்களும் தொடர்ந்து குவிகின்றன. இந்தப் பகுதியைச் சாப்பிடுவது உடலின் வளர்சிதை மாற்றத்தைப் பாதிப்பது மட்டுமல்லாமல், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாட்டிலும் கடுமையான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button