இலங்கை

ரில்வினுக்கு ஹரிணி பயம்; முஜிபூர் எம்.பி. கூறுகிறார்

ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவுக்கு எதிராக கருத்து கூறுவதற்கு பிரதமர் ஹரினி அமரசூரிய பயப்படுகின்றார் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மாகாண சபைகள் தேர்தலை இந்த வருடத்தில் நடத்த முடியாது. அதற்கான பணம் டித்வாவுக்கு செலவிடப்பட்டது என்று ரில்வின் சில்வா தெரிவித்துள்ளமையை தான் காணவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். இங்குள்ள பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளில் ரில்வின் சில்வாவின் கருத்து வெளியாகியிருந்தது. இது அவருக்கு தெரியவில்லை என்றால் பிரதமரின் கண்ணாடியை மாற்ற வேண்டும் என்றுதான் கூற வேண்டும். அவர் அவ்வாறு அதனை பார்க்கவில்லை என்று கூறுவாராக இருந்தால் ரில்வின் சில்வாவுக்கு எதிராக பேசுவதற்கு அவர் பயமாகவும் இருக்கலாம்.அரசாங்கத்தின் பிரதான கட்சியின் செயலாளர் மாகாண சபைகள் தேர்தலை நடத்த முடியாது என்று கூறும் செய்திகளை தான் பார்க்கவில்லை என்று கூறுவது புதுமையான விடயமாகவும் இருக்கின்றது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button