இலங்கை

தென்னிலங்கையில் சூடு பிடிக்கும் அரசியல்! ரணில் – சஜித் திடீர் சந்திப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பு கடந்த புதன்கிழமை கொள்ளுப்பிட்டியிலுள்ள ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இரு தலைவர்களும் மிகவும் சுமுகமான முறையில் நலம் விசாரித்து கலந்துரையாடியுள்ளனர்.

அத்துடன், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்தும் மிகவும் சாதகமான கலந்துரையாடல் ஒன்று அங்கு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக இனிவரும் காலங்களில் நேரடியான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கும் இதன்போது உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமகால அரசாங்கத்திற்கு எதிராக வலுவான எதிர்க்கட்சி ஒன்றை அணி திரட்டும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் மிகுந்ததாக அரசியல் மட்டத்தில் பேசப்பட்டு வருகின்றைமை குறிப்பிடத்தக்கது.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button