உலகம்

என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்

சுவிட்சர்லாந்தின் பூர்கென்ஸ்டாக் பகுதியில் நடைபெற்ற அமெரிக்கா-ஈரான் பேச்சுவார்த்தையில், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தனக்கு மிகவும் விருப்பமான ஒரு இந்தியர் மற்றும் பாகிஸ்தானியர் யார் என்பதை கூறியுள்ளார்.

அவர், “எனது வாழ்க்கையில் இரண்டு முக்கியமானவர்கள் உள்ளனர். ஒருவர் இந்தியர் என் மனைவி உஷா வான்ஸ், மற்றொருவர் பாகிஸ்தானி இராணுவ தளபதி அசிம் முனீர்” என்று குறிப்பிட்டார்.

கடந்த மூன்று மாதங்களில், முனீருடன் தான் அதிகமாக பேசியதாகவும், அவர் சிறந்த இராணுவத் தலைவராக மட்டுமல்லாமல் சிறந்த தூதராகவும் திகழ்கிறார் எனவும் வான்ஸ் பாராட்டினார்.

இந்த பேச்சுவார்த்தை “லேக் லுசெர்ன் உச்சி மாநாடு” என அழைக்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அணு திட்டம், ஹார்முஸ் நீரிணை மற்றும் மத்திய கிழக்கு அமைதி குறித்து முக்கியமான விவாதங்கள் நடைபெற்றன.

வான்ஸ், “இப்போது கேள்வி என்னவென்றால், நாம் எவ்வளவு முன்னேற்றம் செய்ய முடியும்? மத்திய கிழக்கில் நிலையான அமைதியை உருவாக்க முடியுமா?” என்பதைத் தான் ஆராய்ந்து வருவதாக கூறினார்.

இந்த பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் மற்றும் கத்தார் மத்தியஸ்த நாடுகளாக பங்கேற்றன. அமெரிக்கா-ஈரான் இடையே நீண்டகால மோதலுக்கு இடைநிலை ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், இந்த சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button