உலகம்

மகிந்தவுக்கு ஏற்பட்ட மறதி – அநுர அரசின் அமைச்சருடன் நெருக்கமாக பேசியது என்ன….!

சமகால அரசாங்கத்தின் பிரதியமைச்சருடன் மேற்கொண்ட உரையாடலில் பேசப்பட்ட விடயங்களை மறந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெருமவின் மகனின் இறுதிக் கிரியைகளின் போது மகிந்த உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இதன்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அருகில் சென்ற பிரதி அமைச்சர் சுனில் வட்டகல நெருங்கமாக கலந்துரையாடியுள்ளனர்.

நெருக்கமாக பேசியது என்ன….!

இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், அரசியல் மட்டத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

இவ்வாறான நிலையில், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அந்த காட்சியைத் தான் பார்த்ததாகவும், என்ன விடயங்களை தெரிவித்தார் என ஞாபகம் இல்லை என மகிந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இது குறித்து பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவிடம் வினவியபோது, சமூக வலைத்தளங்கள் இதனை ஒரு பெரிய விடயமாகப் பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவிடம் உயிரிழந்த இளைஞனின் திடீர் மரணத்திற்கான காரணத்தை கூறியதாகவும், அதனைத் தவிர்த்து வேறெந்த அரசியல் விடயங்களையும் பேசவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button