உலகம்

பாஜகவில் இருந்து விலகி த.வெ.க.வில் இணைகிறார் விஜயதாரணி!

பாஜகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் விஜயதாரணி இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதாரணி அக்கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கடந்த 2024-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.

பாஜக சார்பில் கடந்த சட்டமன்ற தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு விஜயதாரணி தோல்வி அடைந்தார். அவர் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

இந்நிலையில், பாஜகவில் எந்த பதவியும் வழங்கப்படாததால் அக்கட்சியில் இருந்து விலகி தவெகவில் விஜயதாரணி இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button