பலதும் பத்தும்

பார்ப்பதற்கு பாம்பு – உண்மையில் புழு

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று கூறுவார்கள். ஆனால், அச்சு அசல் விஷப்பாம்பு போலவே தோற்றமளிக்கும் கம்பளிப்பூச்சியைப் பற்றி இதுவரையில் கேள்விப்பட்டது குறைவு.

அமேசன் காடுகளில் அதிகம் காணப்புடும் ஹாக் மொத் என அழைக்கப்படும் ஒரு வகை அந்துப்பூச்சியே இந்த உயிரினமாகும்.

இந்தப் புழுவானது, வளர்ந்து பெரிய அந்துப்பூச்சியாக மாறும் வரை தன்னைத் தற்காத்துக்கொள்ள பாம்பு வேஷத்தைப் போடுகிறது.

இந்தப் புழுவின் விசேஷம் அதன் கண்கள் தான். ஆனால், அவை கண்கள் அல்ல. அவை வெறும் தோல் திசுக்களால் ஆன போலிப் புள்ளிகள்.

இந்தப் புழுவின் உண்மையான தலைப்பகுதி மிகவும் சிறியது. ஆனால், ஏதேனும் ஆபத்து வரும்போது இது தன் உடலின் முன்பகுதியை பெரிதாக்கி அந்தப் போலி கண்களைப் பெரிதாகக் காட்டுகிறது.

இதனை பார்க்கும் ஏனைய உயிரினங்கள் பாம்பு என்று பயந்து ஓடிவிடுகின்றன.

இதனை அறிவியல் மொழியில் மிமிக்ரி என்று சொல்வார்கள்.

இந்தப் புழுவானது பார்ப்பதற்கு மட்டுமில்லாமல் நடவடிக்கைகளும் அப்படியே இருக்கும்.

இப் புழுவின் அடிப்பகுதி, மரக்கிளையைப் போலவே இருக்கும்.

பார்ப்பதற்கு பாம்பைப் போல் தோற்றமளித்தாலும் உண்மையில் இதுவொரு அந்துப்பூச்சி.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button