கடிகாரத்தின் முள் ஏன் வலப் பக்கமாகவே சுற்றுகின்றது?

அன்றாட வேலைகளைப் பார்ப்பதற்கு கடிகாரம் மிகவும் முக்கியமானது.
அவ்வாறு கடிகாரத்தைப் பார்க்கும்போது அதன் முட்கள் எப்பொழுதும் ஏன் இடமிருந்து வலமாகவே திரும்புகின்றன என்று யாராவது சிந்தித்திருப்போமா?
இயந்திரக் கடிகாரங்கள் கண்டுபிடிக்கும் முன்பே மக்கள் சூரியக் கடிகாரத்தைப் பயன்படுத்தினர்.
அதாவது, சூரியனின் ஒளி மற்றும் வீசும் நிழலின் அடிப்படையில் நேரத்தைக் காட்டும் கருவியாக சூரியக் கடிகாரம் இருந்தது.
இதன் காரணமாகத்தான் சூரியக் கடிகாரத்தில் நிழல் இடமிருந்து வலமாக நகர்ந்தது.
இயந்திரக் கடிகாரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், மரபுகளைப் பாதுகாக்க இயந்திரக் கடிகாரங்களின் கைகளும் அதே திசையில் அமைக்கப்பட்டன.
கிரேக்க கண்டுபிடிப்புகளின் செல்வாக்கு மற்றும் முந்தைய பழக்கவழக்கத்தின் காரணமாக, கடிகாரத்தின் முள்களின் திசை சூரியக் கடிகாரத்தின் நிழலின் திசையைப் போலவே அமைக்கப்பட்டது.
பண்டைய பழக்க வழக்கங்களை நினைவு கூரவும் சூரிய நிழலை பின் தொடரவுமே கடிகாரத்தின் முட்கள் வலப்பக்கமாக நகரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
![]()