பலதும் பத்தும்

இரவில் தூங்குவதற்கு முன் கிராம்பை மென்று சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும்?

பல மருத்துவ குணங்கள் நிறைந்த கராம்பை இரவில் தூங்கும் முன் மென்று சாப்பிட்டு விட்டு தூங்கினால் உடலில் பல வியாதிகள் சரியாகும்.

இரவில் தூங்குவதற்கு முன் கிராம்பை மென்று சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும்? | Benefits Of Chewing Cloves Before To Bed At Night

கராம்பு

சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் முக்கிய இடம் பிடிக்கும் கிராம்பு ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டது. மேலும் கிராம்பு வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் பயன்படுகிறது.

மேலும் கிராம்பு வைட்டமின் சி, கே, ஈ, கால்சியம், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் ‘யுஜெனால்’ (Eugenol) எனும் முக்கிய தாவர எண்ணெய் சேர்மத்தைக் கொண்டுள்ளது. 

இப்படி பல சத்துக்கள் கொண்ட கிராம்பை சாப்பிடுவது பல ந்னமை தரும்.

இரவில் தூங்குவதற்கு முன் கிராம்பை மென்று சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும்? | Benefits Of Chewing Cloves Before To Bed At Night

மருத்துவ நன்மைகள்

தூங்குவதற்கு முன் கிராம்பு சாப்பிடுவது வாயுத்தொல்லை, அமிலத்தன்மை, மலச்சிக்கல் வயிறு உப்புசம் ஆகியவற்றைத் தடுக்க உதவுகிறது.

இது உமிழ்நீர் மற்றும் செரிமானச் சாறுகளின் உற்பத்தியை அதிகரித்து, காலையில் வயிறு சுத்தமாக இருக்க வழிவகுக்கிறது. கிராம்பில் யூஜெனால் என்ற இயற்கையான மயக்க மருந்து உள்ளது. இது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்.

இரவில் தூங்குவதற்கு முன் கிராம்பை மென்று சாப்பிட்டால் என்ன நன்மைகள் கிடைக்கும்? | Benefits Of Chewing Cloves Before To Bed At Night

இரவில் கிராம்பு சாப்பிடுவது பல்வலி, ஈறு வீக்கம் மற்றும் வாய் துர்நாற்றம் ஆகியவற்றைப் போக்க உதவும். கிராம்பு சளி மற்றும் காய்ச்சலைப் போக்க உதவுகிறது.

இதற்கு உடலுக்கு வெப்பமூட்டும் தன்மை உண்டு. எனவே இரவில் இதை  சாப்பிடுவது தொண்டையில் உள்ள சளியை அகற்ற உதவுகிறது.

கிராம்பில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இரவு முழுவதும் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்துகின்றன. கிராம்பின் நறுமணம் மனதை அமைதிப்படுத்தி, நல்ல உறக்கத்தை ஊக்குவிக்கிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button