இந்தியா
தனி இயக்கத்தை தொடங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா – வீடியோ வெளியீடு

தமிழ்நாட்டில் புதிய மக்கள் இயக்கம் ஒன்றை தான் ஆரம்பித்துள்ளதாக நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் காணொளியொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.
குறித்த காணொளியில் அவர் குறிப்பிடுகையில், “மக்கள் மேடை – இது மக்களின் இயக்கம்! நம் தமிழகத்தின் வளர்ச்சிக்காகவும், நன்மைகளுக்காகவும் ஒன்றிணைவோம்!” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மாற்றத்தை விரும்புவோர் ஒன்றிணைத்து ஒரு மக்கள் சக்தியாக உருவெடுத்து, பல நல்ல காரியங்களை செய்வோம்.
அரசு அதிகாரிகள், ஆசியர்கள், ஓய்வு பெற்றவர்கள், இளைஞர்கள் என மாற்றத்தை விரும்புவோர் யார் வேண்டுமானாலும் இதில் பங்கேற்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
![]()