பலதும் பத்தும்

காலை உணவை சுவையாக மாற்றும் பலாப்பழ தோசை! எப்படி செய்யலாம்?

பலாப்பழ தோசை

தோசை’ என்ற வார்த்தையைக் கேட்டாலே, அரிசி மற்றும் உளுத்தம் பருப்பால் செய்யப்படும் பாரம்பரிய தோசைதான் நினைவுக்கு வரும்.

ஆனால், நீங்கள் எப்போதாவது பலாப்பழ தோசையை சாப்பிட்டு இருக்கீங்களா?தென்னிந்தியாவில், குறிப்பாக கர்நாடகாவின் மங்களூர்

பகுதியில் செய்யப்படும் இந்தத் தனித்துவமான தோசை, சுவையும் ஊட்டச்சத்தும் நிறைந்தது. எனவே இதை எப்படி செய்யலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.

காலை உணவை சுவையாக மாற்றும் பலாப்பழ தோசை! எப்படி செய்யலாம்? | Jackfruit Dosa Makes Breakfast Delicious At Home

தேவையான பொருட்கள்

  • 1 கப் பழுத்த பலாப்பழம் (விதைகள் நீக்கப்பட்டது),
  • 1 கப் அரிசி (3-4 மணி நேரம் ஊறவைத்தது),
  • 1/2 கப் புதிதாகத் துருவிய தேங்காய்,
  • 2-3 மேசைக்கரண்டி வெல்லம்,
  • 1/2 தேக்கரண்டி ஏலக்காய் தூள்,
  • ஒரு சிட்டிகை உப்பு,
  • தேவையான அளவு தண்ணீர்,
  • தோசை பொரிப்பதற்கு சிறிதளவு நெய் அல்லது எண்ணெய்.

காலை உணவை சுவையாக மாற்றும் பலாப்பழ தோசை! எப்படி செய்யலாம்? | Jackfruit Dosa Makes Breakfast Delicious At Home

செய்யும் முறை

பலாப்பழ தோசை செய்ய, முதலில் பலாப்பழத்தின் சதைப்பகுதியை விதைகளிலிருந்து பிரித்தெடுக்கவும்.

இப்போது, ​​ஒரு மிக்ஸி ஜாரில் பலாப்பழத் துண்டுகளுடன் அரிசி, வெல்லம் மற்றும் தேங்காய்த் துருவலைச் சேர்த்து, மென்மையான மாவுக்கலவையாக அரைக்கவும்.

காலை உணவை சுவையாக மாற்றும் பலாப்பழ தோசை! எப்படி செய்யலாம்? | Jackfruit Dosa Makes Breakfast Delicious At Home

மாவு தயாரானதும், அதை சூடான தோசைக்கல்லில் தோசை போல பரப்பி, இருபுறமும் பொன்னிறமாகும் வரை சுட வேண்டும்.

தயாரான பலாப்பழ தோசை, வெளிப்புறம் சற்றே மொறுமொறுப்பாகவும் உட்புறம் மென்மையாகவும் இருக்கும். இதை தேங்காய் சட்னி, வெல்லம் அல்லது நெய்யுடன் பரிமாறலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button