பலதும் பத்தும்

அமெரிக்காவால் வழங்கப்பட்ட ஹெலிகாப்டர்கள் கொழும்பு வந்தன!

இலங்கை கடற்படைக்கு, அமெரிக்கா கடற்படையால் வழங்கப்பட்ட TH-57 ‘Sea Ranger பல்நோக்கு ஹெலிகாப்டர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட ஹெலிகாப்டர்கள் தற்போது, இரத்மலானவில் உள்ள விமானப்படைத் தளத்தில் தொழில்நுட்பக் கட்டமைப்பு பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

தேவையான ஆய்வுகள், ஏற்பு நடைமுறைகள் மற்றும் சோதனைப் பறப்புகள் நிறைவடைந்த பின்னர், இவை சேவையில் சேர்க்கப்பட்டு செயற்பாட்டுப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இந்த உதவியானது இலங்கைக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது என்று விமானப்படை தெரிவித்துள்ளது.

இவை விரைவில் இலங்கை விமானப்படையில் இணைக்கப்பட்டு, விமானப் பயிற்சி, பேரிடர் நிவாரணம் மற்றும் தேடல்-மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button