உலகம்

3 மணி நேரம் 22 நிபுணர்களால் பரிசோதனை; ட்ரம்பின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு கடந்த செவ்வாயன்று முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 22 நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட சிடி ஸ்கேன் மற்றும் பிற இதயம் தொடர்பான பரிசோதனைகள், புற்றுநோய் பரிசோதனைகள் மற்றும் பிற தடுப்பு மதிப்பீடுகளும் மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 3 மணி நேரம் மருத்துவர்கள் அவருக்கு பரிசோதனை மேற்கொண்டனர். இந்தப் பரிசோதனை குறித்த அறிக்கையை மருத்துவர் சீன் பார்பபெல்லா சமீபத்தில் வெளியிட்டார்.

இந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எடை 108கிலோ இருந்தது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த மருத்துவ பரிசோதனையைவிட 6 கிலோ எடை அதிகம்.

உணவு முறை, உடற்பயிற்சி மற்றும் எடை குறைப்பு குறித்து மருத்துவர்கள் அவருக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர்.

ஆனால் அவரது அறிவாற்றல் மற்றும் உடல் செயல்திறன் மிகச் சிறப்பாக உள்ளது என தெரிவித்துள்ளது.

அதிபரின் உடல்நிலையில் அசாதாரணமாக எதுவும் இல்லை என்றும், அதிபர் வலுவான இதயம், நுரையீரல், நரம்பியல் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button