உலகம்

நீங்கள் நிலைகுலைந்து போவீர்கள் ; புகைப்படத்துடன் போர் எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தனது உருவப்படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்ததை தொடர்ந்து, அது வைரலாகி வருகிறது. ட்ரூத் சோஷியல் என்ற இணையதளத்தில் டிஜிட்டல் முறையில் போலியாக உருவாக்கப்பட்ட தனது உருவப்படத்தை டிரம்ப் வெளியிட்டார்.

அதில் அவர் ராணுவ சீருடையை அணிந்துகொண்டு தனது கையை நீட்டியபடி போருக்கு தயார் ஆவது போன்றும், தன்னைச் சுற்றி போர் விமானங்கள் சீறிப் பாய்வதும் போன்றும் சித்திரிக்கப்பட்டிருந்தார்.

மேலும் அந்த படைப்பில், “நீங்கள் நிலைகுலைவீர்கள்” என்ற வாசகம் இடம்பெற்று இருந்தது.

சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு உச்சிமாநாட்டில் உரையாற்றிய அமெரிக்காவின் போர் துறையைச் சேர்ந்த பீட் ஹெக்ஸெத், “தேவைப்பட்டால் போரை மீண்டும் தொடங்குவதற்கு அமெரிக்கா முழுத்திறனையும் கொண்டுள்ளது” என்று கூறினார்.

இந்த அறிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள CENTCOM,“அமெரிக்க ராணுவ படைகள் பிராந்தியம் முழுவதும் நிலை நிறுத்தப்பட்டு விழிப்புடன் உள்ளன” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் நான்காவது சுற்று இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக இரு நாடுகளும் தற்போது தயாராகி வருகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button