பலதும் பத்தும்
தாஜ்மஹாலை பார்வையிட்டார் ட்ரம்பின் மகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகள் டிஃப்பானி ட்ரம்ப் மற்றும் அவரது கணவரான மைக்கேல் பூலோஸ் ஆகியோர் இந்தியாவின் உலகப் புகழ்பெற்ற காதல் சின்னமான தாஜ்மஹாலை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இந்தியாவிற்குத் தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இவர்கள், உத்திரப்பிரதேசம் ஆக்ராவில் அமைந்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பளிங்கு மாளிகையை நேற்று (30) பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பான புகைப்படம் தற்பொழுது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்படுகின்றன.
![]()