பலதும் பத்தும்

ஒரே நாளில் 100 கிலோ வரை எடையை அதிகரிக்கும் திமிங்கிலம்! எப்படி சாத்தியம்?

திமிங்கலம் கொடுக்கும் பாலால் அதன் குட்டி ஒரு நாளிவேயே 90 தொடக்கம் 100 கிலோ வரையில் எடையை கூடும் என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா? ஆம் கேட்பதற்கு சற்று விசித்திரமாக இருந்தாலும் இது உண்மை தான்.

அப்படி திமிங்கிலத்தின் பாலில் என்ன ஸ்பெஷல் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். சராசரியாக மனித பாலில் வெறும் 4 சதவீமதம் தான் கொழுப்புச்சத்து காணப்படும்.

ஒரே நாளில் 100 கிலோ வரை எடையை அதிகரிக்கும் திமிங்கிலம்! எப்படி சாத்தியம்? | Blue Whale Calf Drinks 200 Litres A Day

ஆனால் திமிங்கிலப் பால் சுமார் 35 முதல் 50 சதவீதம் வரையில் அதிகக் கொழுப்புச் சத்தைக் கொண்டுள்ளது. அதனால் தான் திமிங்கிலத்தின் பால் பற்பசை போல் ரொம்பவுமே அடர்த்தியாக இருக்கும்.

அதனால் தான் திமிங்கிலக் குட்டிகள் தாய்ப்பாலைக் குடித்து மிக விரைவாக எடையை அதிகரிக்கின்றன.

ஒரே நாளில் 100 கிலோ வரை எடையை அதிகரிக்கும் திமிங்கிலம்! எப்படி சாத்தியம்? | Blue Whale Calf Drinks 200 Litres A Day

 

நீலத் திமிங்கிலத்தின் (Blue Whale) குட்டி தினமும் சுமார் 200முதல் 400 லிட்டர் வரை கொழுப்புச் சத்து மிகுந்த தாய்ப்பாலைக் குடிப்பதன் மூலம், ஒரு மணி நேரத்திற்கு சுமார் 5 கிலோ வரை எடை கூடுகிறது.

எனவே, இதன் மூலம் ஒரு குட்டித் திமிங்கிலம் 24 மணிஆநரத்தில் 100 கிலோ வரையில் எடையை மிக எளிதாக அதிகரிக்கிறது.

அதாவது ஒரு மனிதன் கிட்ட தட்ட 3 வருடங்களுக்கு உயிர்வாழ தேவயான அளவு கலோரிகளை ( 1.9 மில்லியன்) திமிங்கிலத்தின் குட்டிகள் ஒரே நாளில் எடுக்கின்றது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button