பலதும் பத்தும்

உலகத்தில் கருப்பு நிற பால் தரும் விலங்கு எது?

பொதுவாக பெரும்பாலான விலங்குகள் வெள்ளை நிறத்தில் தான் பால் கொடுக்கும். ஆனால் உலகத்தில் ஒரு விலங்கு மட்டும் கருப்பு நிறத்தில் பால் கொடுக்குமாம்.

கருப்பு நிற பால்

இயற்கையில் பல அற்புதமான விஷயங்கள் நம்மை கவரும்.  அந்த வகையில் உலகத்தில் ஒரு விலங்குகிற்கு மட்டும் கருப்பு நிறத்தில் தான் பால் வரும்.

இதை பெரும்பாலானோர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள்.

பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகள் போன்ற விலங்குகளின் பால்  வெள்ளை நிறத்தில் இருக்கும் என்பது பலருக்கும் தெரியும். 

கருப்பு நிறத்தில் பால் தரும் விலங்கு பற்றி யாருக்கெல்லாம் தெரியுமா இந்த சுவாரஷ்ய தகவல் பற்றி பதிவில் பார்க்கலாம்.

கருப்பு நிற பால்

கருப்பு நிறத்தில் பால் தரும் விலங்கு எது?

 

 

கருப்பு நிறத்தில் பால் தரும் விலங்கு ஆப்பிரிக்க கருப்பு காண்டாமிருகமாகும் (Black Rhinoceros). இது ஆப்பிரிக்காவில் இருக்கும் அரிதான வனவிலங்கு இனம் எனப்படுகின்றது.

இது பார்ப்பதற்கு பெரிய உடல் மற்றும் வலிமையான கொம்பை கொண்டிருக்கும். இது ஆப்பிரிக்க கண்டத்தின் சில காட்டு பகுதிகளில் வாழ்கிறது.

இந்த விலங்கை வேட்டையாடுதல் மற்றும் வாழ்விட அழிப்பு காரணமாக தற்போது இதன் எண்ணிக்கை குறைந்து வருகின்றது.

கருப்பு நிற பால்

இந்த விலங்கின் பால் கருப்பு நிறத்தில் இருக்குமாம்.

 

ஆனால் விஞ்ஞானிகளின் கூற்றுப்படி  இந்த பால் முற்றிலும் கருப்பு நிறத்தில் இருக்காது எனப்படுகின்றது. 

 

இந்த பாலை சாதாரண பாலுடன் ஒப்பிடும்போது, அதன் நிறம் சற்று மங்கலாகவும் அல்லது சாம்பல் நிறமாகவும் இருக்குமாம். இதன் காரணமாக தான் இது “கருப்பு பால்” என்று அழைக்கப்படுகிறது.

கருப்பு நிற பால்

பாலின் இந்த பாலின் நிறத்திற்கு காரணம் கருப்பு காண்டாமிருகப் பாலில் கொழுப்பு மிகவும் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் என்பதனால் ஆகும்.

ஒளி மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகளின் விளைவுகளால் சில நேரங்களில் பால் கருமையாகத் தோன்றக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button