பலதும் பத்தும்

சைபர் தாக்குதல்களில் பாதுகாக்க chatgpt வழங்கும் புதிய அம்சம்

ஹேக்கிங் மற்றும் பிஷிங் போன்ற இணைய தாக்குதளிலிருந்து கணக்குகளை பாதுகாக்கும் நோக்கில் புதிய வசதியை சேட் ஜிபிடி வடிவமைத்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில் நுட்பத்தில் முன்னணியாக திகழ்ந்து வருவது ஓபன் ஏஐ நிறுவனம்.

பல AI இருந்தாலும் சேட் ஜிபிடி முன்னிலையில் அங்கம் வகித்து வருகிறது.

அதிகமான மக்கள் இதை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து, ஓபன் ஏஐ நிறுவனம் சேட் ஜிபிடி பயன்படுத்துபவர்களுக்காக பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வசதியில் வழக்கமான பாஸ்வேர்ட் லொகின் முறைக்கு மாற்றாக அதிநவீன பயோமெட்ரிக் மற்றும் பாஸ் கீ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது.

அதாவது எப்போவும் போல் இல்லாமல் ஓபன் செய்வதற்கு தங்களின் கைரேகை, ஃபேஸ் ஐடி அல்லது சாதனத்தின் பின் நம்பர் போன்ற ‘பாஸ் கீ’களைப் பயன்படுத்தி மட்டுமே லொகின் செய்ய முடியும்.

மேலும் கூடுதல் பாதுகாப்பு தேவைபடுகிறது என்று நினைப்பவர்கள் ‘யூபி-கீ’ என்ற பாதுகாப்பு சாவியையும் இணைத்துக்கொள்ளலாம்.

ஹேக்கிங் மற்றும் பிஷிங் போன்ற இணையத் தாக்குதல்களிலிருந்து கணக்குகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தேவை என்பவர்கள் மட்டும் இதை பயன்படுத்தி கொள்ளலாம், தேவை இல்லை என்பவர்கள் எப்போதும் போல் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button