இந்தியா

மத்திய நிதியமைச்சரை சந்தித்த முதலமைச்சர் விஜய்!

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் இரண்டு நாள் பயணமாக சென்னையில் இருந்து  (27) காலை தனி விமானம் மூலம் டெல்லிக்குச் சென்றார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக டெல்லி பயணம் மேற்கொண்டார்.

டெல்லி சென்ற முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லி தமிழ்நாடு இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய்க்கு, பூங்கொத்து கொடுத்து அதிகாரிகள் வரவேற்றனர். மேலும், காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வெடுத்த பிறகு முதலமைச்சர் விஜய்   மாலை 4.30 மணியளவில் இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

தொடர்ந்து, மாலை 6 மணியளவில் இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க தமிழ்நாடு இல்லத்தில் இருந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் புறப்பட்டார்.

தமிழகத்திற்கான நிதி சார்ந்த கோரிக்கை மனுவுடன் நிர்மலா சீதாராமனை சந்திக்க முதலமைச்சர் விஜய் புறப்பட்டார்.

இந்நிலையில், டெல்லியில் இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் முதலமைச்சர் விஜய் சந்தித்து பேசினார்.

அப்போது, தமிழகத்திற்கான நிதி சார்ந்த கோரிக்கை மனுவுடன் நிர்மலா சீதாராமனை முதலமைச்சர் ஜோசப் விஜய் சந்தித்து பேசினார்.

தமிழ்நாட்டிற்கான நிதி சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button