பலதும் பத்தும்

நீர்ச்சத்து குறையாமல் இருக்க 6 சூப்பர் வீட்டு வைத்தியம்!

கோடைக்காலத்தில் டீஹைட்ரேஷன் ஒரு பொதுவான, ஆனால் ஆபத்தான பிரச்னை. இது சோர்வு, தலைவலி, மயக்கம், குறைந்த ரத்த அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்தும். ஆனால், கவலை வேண்டாம்! இதற்கும் நம்ம பாட்டி வைத்தியம் இருக்கு. டீஹைட்ரேஷனைத் தடுக்க உதவும் 6 எளிய வீட்டுக்குறிப்புகளைப் பார்க்கலாம்.

மோரில் வறுத்த சீரகம், கருமிளகு, கொத்தமல்லி சேர்த்து குடியுங்கள். இது உடலுக்கு குளிர்ச்சி தந்து, செரிமானத்தைச் சரிசெய்யும். அடிக்கடி தாகம் எடுப்பதையும் குறைக்கும்.

மிக எளிமையான ஒரு பாட்டி வைத்தியம் இது. பருப்பு அல்லது சாலட்டில் வெங்காயத்தைச் சேர்த்துச் சாப்பிட்டால், அது உடலை உள்ளிருந்து குளிர்ச்சியாக வைக்கும். பல வீடுகளில், வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, பச்சை வெங்காயத்தை பாக்கெட்டில் வைத்துக்கொள்வார்கள்.

உடனடி ஆற்றலுக்கு இது ஒரு சிறந்த வழி. எலுமிச்சை சாறுடன் சிறிது கருப்பு உப்பு மற்றும் சர்க்கரை கலந்து குடியுங்கள். இது உடலில் உப்பு – சர்க்கரை சமநிலையை பராமரித்து, வியர்வையால் ஏற்படும் இழப்பை விரைவாக ஈடுசெய்யும்.

தர்பூசணி, வெள்ளரி போன்ற பழங்களில் 90%க்கும் மேல் தண்ணீர் உள்ளது. இவற்றில் கருப்பு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்துச் சாப்பிட்டால், உடலுக்குத் தேவையான மினரல்கள் கிடைப்பதோடு, நீர்ச்சத்தும் குறையாமல் இருக்கும்.

வில்வப் பழ சர்பத் உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் ஒரு ஆயுர்வேதப் பொக்கிஷம். இது வயிற்றுச் சூடு மற்றும் அசிடிட்டியைக் குறைத்து, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளும்.

இளநீர் உடலின் எலக்ட்ரோலைட்டுகளை சமன் செய்து, உடனடி ஆற்றலைத் தருகிறது. இதில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் சோடியம் ஆகியவை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button