உலகம்

எபோலா … சர்வதேச பொது சுகாதார அவசரநிலை; உலக சுகாதார அமைப்பு

ஆபிரிக்க நாடுகளான காங்கோ மற்றும் உகாண்டாவில் பரவியுள்ள எபோலா நோயானது, சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாகும் என உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. தற்போது எபோலா தடுப்பு நடவடிக்கைகளில் கண்காணிப்பை காங்கோ தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நோய்ப் பரவலின் மையமாக விளங்கும் இடுரி மாகாணத்தில், கிட்டத்தட்ட 5 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் எபோலா அச்சுறுத்தலை மட்டுமல்லாமல் பல்வேறு வகையான நோய்களையும் எதிர்கொள்கின்றனர்.

குறிப்பாக, இவர்களில் 20% மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுவரை 101 வழக்குகள் உறுதிசெய்யப்பட்டன. மேலும் 900 இற்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான வழக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்நிலையில் 131 பேர் பலியாகி உள்ளதாக அந்நாட்டின் பொதுச் சுகாதார மந்திரி சாமுவேல் ரோஜர் கம்பா தெரிவித்துள்ளார்.

இந்நோயின் அச்சுறுத்தலால் காரணமாக மக்கள் யாரும் தாமாக முன் வந்து சிகிச்சையோ பரிசோதனையோ ஏற்பதில்லை.

ஆதலால் எபோலா தொற்றுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தவும், ஆதரவுப் பராமரிப்பை வழங்குவதற்காக நோய்த்தொற்றுகளை முன்கூட்டியே கண்டறிவதும் கடிணமாக உள்ளது என்றும் லக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button