இலங்கை

தமிழ் தேசியத்திற்கு விரோதமானவரே அர்ச்சுனா : உண்மையை போட்டுடைக்கும் சமுக ஆர்வலர்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை தமிழ்தேசியவாதி என்ற பட்டியலுக்குள் வைத்திருப்பதையே நான் ஒருபோதும் ஒத்துக்கொள்ளமாட்டேன்.தமிழ் தேசியம் சார்ந்த பங்களிப்பு இவருடைய வாழ்க்கை பயணத்தில் எப்போதும் இருந்தது இல்லை.

தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்கும் ஒருவர் தான் தமிழ் தேசியவாதி என சொல்லத் தேவையே இல்லை.அவரது செயற்பாடுகளில் இருந்தே அவர் யார் என்பதை இனம் காண முடியும்.

தமிழ்தேசியத்தை பேசியபடியே தமிழ்மக்கள் மத்தியில் தமிழ் தேசியத்திற்கு விரோதமான செயற்பாடுகளை விதைப்பதில் தற்போது பேரினவாத சக்திகள் ஈடுபட்டுள்ளன.அவ்வாறான ஊடகங்களே இன்று அர்ச்சுனாவை முன்னிலைப்படுத்தி வருகின்றன.

இவ்வாறு தெரிவித்தார் சமுக செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான இராசையா உமாகரன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button