இலங்கை

கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் ஒருவர் மீட்பு!

தற்போது நிலவும் பலத்த காற்று காரணமாக திசைமாறி வந்து, நெடுந்தீவுக் கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் ஒருவர் நெடுந்தீவு கடற்றொழிலாளர்களால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் இராமேஸ்வரம், இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்டு நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

(23) மாலை 4.30 மணியளவில் குறித்த மீனவர் நெடுந்தீவு மீனவர்களால் மீட்கப்பட்டு தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளின் பின்னர் நாளை (24) அவரை ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் நெடுந்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button