பலதும் பத்தும்

தினமும் வெறும் 30 வினாடிகள் Plank செய்தால் என்ன நன்மை?

நாம் தினமும் 30 விநாடிகளுக்கு பிளான்க் செய்தால் அது உடலுக்கு என்ன நன்மைகளை கொடுக்கும் என்பதை பதிவில் பார்க்கலாம்.

 30 நாட்களுக்கு பிளான்க்

பிளான்க் (Plank) என்பது உடலின் நடுப்பகுதி (Core) தசைகளை வலுவாக்கும் ஒரு சிறந்த உடற்பயிற்சி. இந்த பயிற்சியானது மையத் தசைகளை நேரடி இலக்காகக் கொள்கிறது.

இதில் உங்கள் வயிற்றுத் தசைகள் மட்டுமல்லாமல், அடிவயிற்றுத் தசைகள், பக்கவாட்டுத் தசைகள் மற்றும் இடுப்புத் தசைகளும் அடங்கும்.

நீங்கள் நாள் முழுவதும் மேசையில் அமர்ந்து வேலை செய்பவராக இருந்தால், பிளாங்க் பயிற்சி ஒரு வரப்பிரசாதம். அது முதுகுத்தண்டு, தோள்பட்டைகள் மற்றும் கழுத்தை சரியான நிலைக்குக் கொண்டுவருகிறது.

30 வினாடிகள் Plank

 

இதைத் தினமும் செய்வது உங்கள் முதுகை நேராக வைத்திருக்கவும், கூன் விழுந்து நடப்பதைத் தடுக்கவும் உதவுகிறது. கீழ் முதுகு வலி பெரும்பாலும் பலவீனமான மையத் தசைகளால் ஏற்படுகிறது.

பிளாங்க் பயிற்சிகள், முதுகுத் தசைகளுக்கு எந்தவிதமான கூடுதல் அழுத்தத்தையும் கொடுக்காமல் அவற்றை வலுப்படுத்தும். இது படிப்படியாக முதுகு வலியைக் குறைக்கும்.

தினமும் வெறும் 30 வினாடிகள் Plank செய்தால் என்ன நன்மை? | Benefits Of Doing Plank Just 30 Second Every Day

பிளாங்கிங் உங்கள் சமநிலையை மேம்படுத்துவதோடு, உங்கள் கால்விரல்கள், பாத வளைவுகள் மற்றும் தோள்பட்டை தசைகளை நீட்டி, உங்கள் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது.

எனவே 30 வினாடிகள் அதிக கலோரிகளை எரிக்காவிட்டாலும், அது உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தைத் தூண்ட இது உதவும். இதைத் தொடர்ந்து செய்து வந்தால், நாள் முழுவதும் உங்கள் உடல் கலோரிகளை எரிக்க உதவும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button