சிட்னியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறப்பு

அவுஸ்திரேலியா சிட்னியில் தமிழின அழிப்பை பிரதிபலிக்கும் வகையில், நினைவின் வழியே இனத்தின் வரலாற்றை காக்கும் ஒரு சின்னமாக, முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி சனிக்கிழமை திறக்கப்பட்டது.
இனப்படுகொலைக்கு இலக்கான தாயகத் தமிழ் மக்களின் நினைவாகவும், அவர்களின் நினைவு நாட்களில் மலர் தூவி வணக்கம் செலுத்துவதற்கும் சிட்னி நகரில் நிரந்தர ‘தமிழர் நினைவுத் தூபி’ ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

தமிழர் இன அழிப்பு நினைவுத் தூபி திறப்பு நிகழ்வு இன்று காலை 9.45 மணிக்கு நடைபெற்றது. இந்த நிகழ்வில் Cumberland நகர சபை முதல்வர் பங்கேற்று, நினைவுத் தூபியை திறந்துவைத்தார்.

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உருவாக்கப்பட்ட இந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி, வெறும் கற்களாலும் சிலைகளாலும் ஆன ஒரு கட்டமைப்பு அல்ல. அது தமிழர் இனத்தின் துயர வரலாறு, போராட்ட நினைவு, இன அழிப்பு வேதனை மற்றும் நீதிக்கான தொடர்ச்சியான அழைப்பின் அடையாளமாக திகழ்கிறது.
![]()