பலதும் பத்தும்

நீங்கள் 40 வயதை தாண்டுறீங்களா? இதை கட்டாயம் பின்பற்றுங்க

நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் 40 வயதுக்கு பின்பு பின்பற்ற வேண்டிய சில பழக்கங்களைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

வாழ்க்கை முறை

பொதுவாக 40 வயதை கடந்து செல்லும் ஒவ்வொருவரும் தனது உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுப்பது மிகவும் அவசியம் ஆகும்.

நாம் உடலை சரியாக கவனிக்கவில்லையெனில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என பிரச்சனைகள் அடுத்தடுத்து வந்துவிடுகின்றது.

40 வயதிலும் 20 வயது போன்ற வலிமையுடன் இருப்பதற்கு சில உணவுப்பழக்கங்களில் மாற்றம் கட்டாயம் தேவை. அதாவது காலை, மதியம், இரவு நேரங்களில் எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை தொடர்ந்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

நீங்கள் 40 வயதை தாண்டுறீங்களா? இதை கட்டாயம் பின்பற்றுங்க | Diet Chart For People Crossed 40 Years

காலை உணவு

காலை உணவாக இட்லி மற்றும் சாம்பார், சப்பாத்தி மற்றும் குருமா இவற்றினை எடுத்துக் கொள்ளலாம். அதிலும் இவற்றில் 70 சதவீதம் காய்கறியும், 30 சதவீதம் தோசை, சப்பாத்தி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். மேலும் 9 மணிக்குள் காலை உணவை முடித்துவிடவும்.

நீங்கள் சாப்பிடும் உணவில் புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின், கனிமச்சத்து இவை கட்டாயம் இருக்க வேண்டும்.

நீங்கள் 40 வயதை தாண்டுறீங்களா? இதை கட்டாயம் பின்பற்றுங்க | Diet Chart For People Crossed 40 Years

சம்பா ரவை, கோதுமை ரவையை காலையில் உப்புமா, கிச்சடியாக செய்து சாப்பிடலாம். இதிலும் காய்கறிகளை சேர்த்து சாப்பிடவும். முட்டையின் வெள்ளைக்கரு கட்டாயம் இருக்க வேண்டும்.

மதிய உணவிற்கு முன்பு பசி ஏற்பட்டால், 11 மணியளவில் ஆப்பிள், பேரிக்காய், ஆரஞ்சு போன்றவற்றினை எடுத்துக் கொள்ளலாம். அல்லது பழங்களை சாலட்டாக செய்து சாப்பிடலாம்.

நீங்கள் 40 வயதை தாண்டுறீங்களா? இதை கட்டாயம் பின்பற்றுங்க | Diet Chart For People Crossed 40 Years

மதிய உணவு

மதிய உணவாக சாதம் சாப்பிடலாம். கருப்பு கவுனி அரிசி, கைக்குத்தல் அரிசி, தானிய வகைகள் இவற்றினை சேர்த்துக் கொள்ளலாம். வாரத்திற்கு 2 நாட்கள் வெள்ளை அரிசி சாதம் எடுத்துக் கொள்ளலாம்.

அதே போன்று நீங்கள் வைக்கும் குழம்பில் அதிகமான காய்கறிகை சேர்க்கவும். முக்கியமாக காய்கறியில் பொரியல் செய்தும் சாப்பிடவும். ஆனால் எண்ணெய் அதிகளவில் சேர்ப்பதை தவிர்க்கவும்.

நீங்கள் 40 வயதை தாண்டுறீங்களா? இதை கட்டாயம் பின்பற்றுங்க | Diet Chart For People Crossed 40 Years

பருப்பை கெட்டியாக வேக வைத்து சாப்பிடலாம். இதில் உடம்பிற்கு தேவையான புரதச்சத்து கிடைக்கின்றது. கடைசியாக ஒரு கப் தயிர் கட்டாயம் இருக்க வேண்டும். இதிலுள்ள புரோபயோடிக் உடலில் அல்சர் வராமல் தடுக்கின்றது.

நீங்கள் 40 வயதை தாண்டுறீங்களா? இதை கட்டாயம் பின்பற்றுங்க | Diet Chart For People Crossed 40 Years

அதுவே நீங்கள் அசைவ பிரியராக இருந்தால், கிரில் சிக்கன், மீன், கீரைகள் இவற்றினை சேர்த்துக் கொள்ளலாம். ஏனெனில் இவற்றில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கின்றது. முட்டையிலிருந்து புரதச்சத்தும், மீன்களிலிருந்து ஒமேகா 3 கொழுப்பு அமிலமும் கிடைக்கின்றது.

மாலை நேரத்தில் க்ரீன் டீ, பிளாக் டீ, பிளாக் காபி இவற்றினை பருகலாம். அத்துடன் கருப்பு சுண்டல், பச்சை பயறு இவற்றினையும் சாப்பிடலாம்.

இரவு உணவு

இரவு உணவை 9 மணிக்குள் முடித்துவிட வேண்டும். இரண்டு சப்பாத்தி, காய்கறி சேர்த்த குருமாவை எடுத்துக்கொள்ளவும். அவ்வாறு இல்லையெனில் வேக வைத்த முட்டையின் மஞ்சள் கரு, காய்கறி சாலட், சூப் இவற்றினை எடுத்துக் கொள்ளவும்.

நீங்கள் 40 வயதை தாண்டுறீங்களா? இதை கட்டாயம் பின்பற்றுங்க | Diet Chart For People Crossed 40 Years

இரவு உணவுக்கும், தூங்குவதற்கும் இடையே 2 மணி நேரம் இடைவெளி கட்டாயம் இருக்க வேண்டும். 20 நிமிடம் நடைபயிற்சி செய்தால் இரவில் ஆழ்ந்த தூக்கத்தினை பெறலாம்.

மஞ்சள் தூள் கலந்த பாலை நன்றாக காய்ச்சி இரவில் குடித்து வந்தால் வலிகள் மற்றும் வீக்கம் இவைகள் குறையுமாம்.  

நீங்கள் 40 வயதை தாண்டுறீங்களா? இதை கட்டாயம் பின்பற்றுங்க | Diet Chart For People Crossed 40 Years

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button