இலங்கை

மகிந்த ராஜபக்‌ஷ ஒரு கொள்ளைக்காரரே;  அவரின் பேச்சாளர் கூறுகிறார் 

மகிந்த ராஜபக்‌ஷ என்பவர் மக்களின் மனங்களை கொள்ளையடித்த தலைவரே தவிர, நாட்டின் திறைசேரி பணத்தை கொள்ளையடித்த திருடன் அல்ல என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ வாக்குமூலமளித்த பின்னர், அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மனோஜ் கமகே இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

மகிந்த ராஜபக்‌ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இரண்டு மணித்தியாலங்கள் வாக்குமூலங்களை வழங்கிய பின்னர் வெளியேறி சென்றுள்ளார். எவ்வாறாயினும் மகிந்த ராஜபக்‌ஷ என்பவர் திறைசேரியை கொள்ளையடித்த திருடன் அல்ல. அவர் நாட்டு மக்களின் மனங்களை கொள்ளையடித்த தலைவரே. இதனாலேயே ஆயிரக் கணக்கான மக்கள் இங்கு ஒன்று கூடியுள்ளனர்.

ஆனால் திறைசேரியை கொள்ளையடித்த, நிலக்கரி மோசடி, 323 கொள்கலன்கள் மற்றும் இலட்சக் கணக்கான டொலர்கள் காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை. அவர்களை விசாரணைக்கு அழைக்கவில்லை.

இதேவேளை பிரபாகரனை கொன்ற மே 18ஆம் திகதி நெருங்கும் போது ஏன் இவ்வாறு செய்ய வேண்டும். திசைகாட்டி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு விடுதலைப் புலி டயஸ்போராக்களே பணத்தை இரைத்துள்ளது. அவர்களை மகிழ்விக்கவே பிரபாகரனை கொன்ற தலைவருக்கு நெருக்கடிகளை கொடுக்கின்றனர். மகிந்த ராஜபக்‌ஷ என்பவர் இந்த நாட்டின் அரசியல் கலாச்சாரமாகும். இவர் மீது கை வைக்க முன்னர் இரண்டுமுறை சிந்தியுங்கள். நீங்கள் செய்வதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் பதிலளிப்பர் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button