சீமானை சந்தித்தார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் நேற்று (11) நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த த.வெ.கவின் தலைவர் ஜோசப் விஜய், தமிழக முதல்வராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றார். இந்தச் சூழலில், அவர் நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்திக்க சென்னை நீலாங்கரையில் உள்ள அவரின் இல்லத்துக்கு சென்ற ஜோசப் விஜய்யை, சீமான் வாசலுக்கே வந்து ஆரத் தழுவி வரவேற்றார். சீமானுக்கு ஜோசப் விஜய் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். இதனையடுத்து சீமானும் முதல்வர் ஜோசப் விஜய்க்கு புத்தகம் கொடுத்து மரியாதை செய்தார்.
சீமானுடன் சிறிது நேரம் உரையாடிய பின்னர் அங்கிருந்து முதல்வர் ஜோசப் விஜய் புறப்பட்டார். முதல்வர் ஜோசப் விஜய்யை வாசல் வரை சென்று சீமான் வழியனுப்பி வைத்தார்.
![]()