பலதும் பத்தும்

இயற்கை முறையில் உதடுகளை சிவப்பாக்கணுமா?; இந்த 3 பொருள் போதும்!

பொதுவாகவே பெண்களின் அழகுசாதன பொருட்களில் லிப்ஸ் டிக் முக்கிய இடம் வகிக்கின்றது. காரணம் முகம் எவ்வளவு அழகாக இருந்தாலும் உதடுகள் இளம்சிவப்பு நிறத்தில் இல்லாத போது எவ்வளவு ஒப்பனை பொருட்களை பயப்படுத்தினாலும் நேர்த்தியாக இருக்காது.

உதடுகளை மென்மையாகவும் அழகாகவும் இல்லாத போது, அழங்காரங்கள் மொத்தமும் பயனற்றதாக ஆகிவிடும். அதனால் தான் பெண்களின் முக அழகினை எடுத்துக்காட்டுவதில் உதடுகள் முக்கிய இடம் வகிக்கின்றது.

பெண்களில் அதிகமானோர் லிப்ஸ் டிக் பாவிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் இவ்வாறு ரசாயனம் கலந்த லிப்ஸ்டிக்கை நாள் தோறும் பயன்படுத்துவதால், உதடுகள் நாளிடைவில் கருப்பாக மாற வாய்ப்புள்ளது.

மேலும் இதனால் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் இருப்பதாக மருத்துவவர்கள் எச்சரிக்கின்றார்கள். இந்த பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் வகையில் தினசரி பாவனைக்கு உகந்தவாறு, எந்தவித பக்கவிளைவுகளும் இன்றி வீட்டிலேயே வெறும் மூன்றே இயற்கை பொருட்களை கொண்டு எவ்வாறு உதட்டு சாயம் தயாரிப்பது என இந்த பதிவில் பார்க்கலாம்.

இயற்கை முறையில் உதடுகளை சிவப்பாக்கணுமா? இந்த 3 பொருள் போதும்! | Chemical Free Homemade Beetroot Lipstick Recipe

மூலப்பொருட்கள்

பீட்ருட் – 1 (சாதாரண அளவில்)

நெய் 1/2 தே.கரண்டி

தேன் 1/2 தே.கரண்டி

செய்முறை

இயற்கை முறையில் உதடுகளை சிவப்பாக்கணுமா? இந்த 3 பொருள் போதும்! | Chemical Free Homemade Beetroot Lipstick Recipe

முதலில் பீட்ருட் தோல் சீவி சிறிது சிறுதாக வெட்டி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்துக்கு  அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அரைத்த பீட்ருட் சாறை மூன்று முறை வடிக்கட்டி எடுக்க வேண்டும். அதன் பின்னர் பீட்ருட் சாறை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

இயற்கை முறையில் உதடுகளை சிவப்பாக்கணுமா? இந்த 3 பொருள் போதும்! | Chemical Free Homemade Beetroot Lipstick Recipe

அது நன்றாக கொதித்து கட்டியாக மாறும் போது, அடுப்பில் இருந்து இறக்கி அதில் நெய் மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.

கடைசியில் விருப்பமான ஒரு சிறிய போத்திலில் ஊற்றி 20 நிமிடங்கள் ஆற விட்டு எடுத்தால் அவ்வளவு தான் எந்தவித ரசாயன கலவையும் இன்றி உதட்டுச்சாயம் தயார்.

இந்த லிப்ஸ்டிக்கை தினமும் பயன்படுத்தினாலும் சரி இரவு முழுவதும் அகற்றாமல் விட்டாலும் சரி எந்த பாதிப்பும் ஏற்படாது. குழந்தைகளும் சுட இதனை தாராளமாக பயன்படுத்தலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button