பலதும் பத்தும்

பப்பாளி மட்டுமல்ல இதை சாப்பிட்டாலும் கருச்சிதைவு வரும் – மருத்துவ விளக்கம்

பப்பாளி சாப்பிடுவது மட்டுமல்லாமல் வேறு சில பொருட்களை உட்கொள்வதும் கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கிறது என்பது பலருக்கும் தெரியாது.

கருச்சிதைவு

கர்ப்ப காலம் மிகவும் நுட்பமான காலகட்டம். எனவே இந்த கால கட்டத்தில் எல்லாவற்றையும் மிகுந்த கவனத்துடன் உட்கொள்ள வேண்டும். கர்ப காலத்தில் சில உணவுகளை சாப்பிட கூடாது என பரிந்துரைக்கப்படுகின்றது. அவற்றில் ஒன்று பப்பாளி.

கர்ப்ப காலத்தில் பப்பாளி சாப்பிடுவது பாதுகாப்பற்றது என்றும், அது கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

உங்களுக்கு இது தெரியாமல் இருக்கலாம், ஆனால் கர்ப்ப காலத்தில் பப்பாளி மட்டுமல்ல இன்னும் சில உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

பப்பாளி மட்டுமல்ல இதை சாப்பிட்டாலும் கருச்சிதைவு வரும் - மருத்துவ விளக்கம் | Pregnant Women Eat This It Will Cause Miscarriage

 

கர்ப்ப காலத்தில் தாய் மற்றும் குழந்தை இருவரின் ஆரோக்கியத்தையும் கவனித்துக்கொள்வது அவசியம்.

தொற்று, கருப்பைச் சுருக்கங்கள் அல்லது பிற பிரச்சனைகள் போன்ற சில காரணிகள் கருச்சிதைவு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.

இருப்பினும், ஒவ்வொரு பெண்ணின் சூழ்நிலையும் வேறுபட்டது, எனவே உங்கள் மருத்துவர் அல்லது மகப்பேறு மருத்துவரிடம் ஆரோசனை பெற்றுக்கொள்வது அவசியம்.

பப்பாளி மட்டுமல்ல இதை சாப்பிட்டாலும் கருச்சிதைவு வரும் - மருத்துவ விளக்கம் | Pregnant Women Eat This It Will Cause Miscarriage

எதை சாப்பிட கூடாது?

மேலும் கண்டறிக
ஆன்மீக கட்டுரைகள்
உலக செய்திகள்
கல்வி தகவல்கள்

அன்னாசிப்பழம்

  • அன்னாசிப்பழதில் புரோமெலைன் என்ற நொதி அதிக அளவில் இருப்பதால், இது கருப்பையைப் பாதிக்கக்கூடும். எனவே கர்பிணிகள் தவிர்க்க வேண்டும். சிறிய அளவில் எடுத்துக்கொள்வது பரவாயில்லை, ஆனால் அதிக அளவில் எடுத்துக்கொள்வதையோ அல்லது அதன் சாற்றைக் குடிப்பதையோ தவிர்ப்பது நல்லது.

கற்றாழை சாறு

  • இந்த முக்கியமான காலகட்டத்தில் கற்றாழைச் சாற்றை உட்கொள்ளாமல் கவனமாக இருங்கள். மருத்துவர்கள் மற்றும் உணவு நிபுணர்கள் கற்றாழை சாறு கர்பிணிகளுக்கு உகந்தல்ல என கூறுகின்றனர். கற்றாழையில், ஆந்த்ராகுயினோன்கள் எனப்படும் சேர்மங்களைக் கொண்ட லேடெக்ஸ் (ஒரு மஞ்சள் நிறப் பிசின்) உள்ளது. இந்த சேர்மங்கள் கருப்பையைச் சுருங்கச் செய்து, கருச்சிதைவு அல்லது முன்கூட்டிய பிரசவத்தின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.

கருப்பு மிளகு

  •  டாக்டர் குர்பிரீத் ஜுனேஜாவின் கூற்றுப்படி, சில கர்ப்பமாக இருக்கும் பெண்கள் கருப்பு மிளகைத் தவிர்க்க வேண்டும் என கூறுகிறார். இருப்பினும், ஒவ்வொரு பெண்ணின் உடலும் வேறுபட்டது. கருப்பு மிளகில் ஆரோக்கிய நன்மைகள் இருப்பதால் இதை மிதமான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.  இது அதிக உஷ்ணமானது, எனவே அதிகமாக உட்கொள்வது கருச்சிதைவு அபாயத்தை அதிகரிக்கக்கூடும். தினமும் அரை தேக்கரண்டி (1-2 கிராம்) தூளை உட்கொள்வது பாதுகாப்பானது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button