இந்தியா

தவெக தலைவர் விஜய்க்கு இலங்கை தேரர் விடுத்துள்ள எச்சரிக்கை..

அண்மையில் இடம்பெற்ற தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தலில் 108 ஆசனங்களை பெற்று வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய்க்கு இலங்கை விவகாரத்தில் தலையிடக் கூடாது என, பத்தரமுல்ல சீலரத்ன தேரர் எச்சரித்துள்ளார்.

தமிழ்நாட்டின் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றாலும் பெரும்பான்மை கிடைக்காததால் இதுவரை முதலமைச்சர் பதவியை பெற முடியாமல் உள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்.

இவ்விடயம் தற்போது, இலங்கை உட்பட பல சர்வதேச நாடுகளிலும் அதிக கவனத்தை பெற்றுள்ளது.

இவ்வாறிருக்கையில், பத்தரமுல்ல சீலரத்ன தேரர் ஊடக சந்திப்பு ஒன்றில், தவெக தலைவர் விஜயை நோக்கி இலங்கை அரசியலில் தலையிடாமல் இருப்பது நல்லது என எச்சரித்துள்ளார்.

அதேநேரம், நாடாளுமன்ற உறுப்பினர், இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button