திமுக – அதிமுக கூட்டணி? தமிழகத்தில் அடுத்த ட்டுவிஸ்ட்

தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் ஒரு தொங்கு சட்டசபையை உருவாக்கியுள்ள நிலையில், ஆட்சி அமைக்க ஆதரவு கோரி அதிமுக தரப்பிலிருந்து திமுகவிற்கு தூது அனுப்பப்பட்டதாகத் தகவல்கள் வௌியாகின.
இருப்பினும், அதிமகவினால் முன்வைக்கப்பட்ட இந்த முன்மொழிவை திமுக தலைமை நிராகரித்துவிட்டதாக அறியக்கிடைத்துள்ளது.
மக்களின் தீர்ப்பிற்கு எதிராகச் செயல்படத் தங்களுக்கு விருப்பமில்லை என்பதால், எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தவிடயம் தொடர்பில் மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி தமது எக்ஸ் கணக்கில் குறிப்பிடுகையில், வலிமையான எதிர்க்கட்சியாக செயல்பட திமுக முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், தமிழக வெற்றி கழகம் (TVK) அமைக்கவிருக்கும் ஆட்சிக்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை என்பதை அதிமுக மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக, தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கரைச் சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து, 16-வது தமிழக சட்டமன்றத்தை மே 5 முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆளுநர் கலைத்தார்.
தமிழக சட்ட மன்றத் தேர்தல் 2026-ல் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவாகி உள்ளது.
ஆட்சி அமிப்பதற்கான நகர்வுகளை அக்கட்சி மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தலில் திமுக – 59, அதிமுக – 47, காங்கிரஸ் – 5, பாமக – 4, ஐயூஎம்எல் – 2, இந்திய கம்யூனிஸ்ட் – 2, மார்க்சிஸ்ட் – 2, விசிக – 2, தேமுதிக – 1, பாஜக – 1, அமமுக – 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இப்போது தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு வழங்கி உள்ளது.
இந்த சூழலில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையிலான கூட்டணி முறிந்ததை அடுத்து, அக்கட்சியின் நிர்வாகிகள், தங்களது பழைய கூட்டணி கட்சி மீது பரஸ்பரம் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
இந்த சூழலில் திமுக மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, எக்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது,
காங்கிரஸ் (மற்றும் இன்னும் பிற கூட்டணிக் கட்சிகளின்) துரோகத்தையும் மீறி, வலிமையான எதிர்க்கட்சியாகவே செயல்பட திமுக முடிவு செய்துள்ளது.
தவெக ஆட்சி அமைப்பதை தடுக்கும் வகையில் பாஜகவை வலியுறுத்தி வருகிறது அதிமுக.
இது மக்களின் தீர்ப்பை அவமதிக்கும் வகையிலான செயலாகும். ஜனநாயகம் வெல்லும் என நம்புகிறோம் என அவர் அதில் கூறியுள்ளார்.
![]()