தமிழகத்தில் வெற்றி.. யாழ்ப்பாணத்தில் கொண்டாட்டம்! காக்கைதீவு கடற்கரையில் விண்ணை முட்டிய ‘தமிழக வெற்றி கழக’ கொடி!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலிலேயே மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து வருகிறது.
இக்கட்சி சுமார் 108 தொகுதிகளில் முன்னிலை வகித்து திராவிடக் கட்சிகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
இதனிடையே யாழ்ப்பாணத்தின் காக்கைதீவு கடற்கரை பகுதியில் ‘விஜயின் வெற்றி’ கொடி ஒன்று பறக்கவிடப்பட்டுள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தக் கொடி, கடற்கரைப் பகுதியில் உயரமான கம்பத்தில் கட்டப்பட்டுள்ளது
‘விஜயின் வெற்றி’ என்ற வாசகம் சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்களை உருவாக்கியுள்ளது.
சிலர் இதனை அரசியல் அல்லது சமூக இயக்கங்களுடன் தொடர்புபடுத்தி விவாதிக்கின்றனர்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தின் முக்கியமான கடற்கரைப் பகுதிகளில் ஒன்றான காக்கைதீவு, சமீப காலங்களில் சுற்றுலா மற்றும் உள்ளூர் மக்கள் வருகை அதிகரித்துள்ள இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது
![]()