இந்தியா

படித்த கல்லூரியில் வெற்றி சான்றிதழ் பெற்ற விஜய்

தவெக தலைவர் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுள்ளார்.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 106 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.

தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.

பெரு வாரியான வெற்றிக்கு பின்னர் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் அடையாறில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்ற தவெக தலைவர் விஜய், பெற்றோரிடம் ஆசி பெற்றார்.

அதன் பின்னர், அங்கிருந்து புறப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற லயோலா கல்லூரிக்கு சென்று பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான வெற்றி சான்றிதழை பெற்றுள்ளார்.

விஜய்யை காண ஏராளமான தொண்டர்கள் அந்த பகுதியில் குவிந்திருந்தனர். விஜய் லயோலா கல்லூரியில் தான் படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button