2.5 மில்லியன் டொலர் மோசடி- அதிகாரியின் உயிரிழப்புக்கு அரசின் தவறான முடிவுகளே காரணம்: விமல் வீரவன்ச சாடல்

நீதிமன்றங்கள் தீர்ப்பளிப்பதற்கு முன்னரே அமைச்சர்கள் தீர்ப்புகளைக் கூறுவது நீதிமன்ற அவமதிப்பாகும் என்றும் இதற்காக ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள் அனைவரும் நீதிபதிகள் முன்னிலையில் மன்னிப்புக்கோர வேண்டும் என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் பணி நீக்கப்பட்ட மேலதிக பணிப்பாளர் உயிரிழந்துள்ளமை உயிர்மாய்ப்பு எனக் குறிப்பிடப்படுகின்றது.
அரசின் தவறான தீர்மானங்களினால் அரச உத்தியோகத்தர்களே பலியாகின்றார்கள் இருப்பினும் தீர்மானம் எடுத்த அமைச்சரவை உறுப்பினர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்த மோசடி விவகாரத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க பற்றி ஆளும் தரப்போ அல்லது ஹர்ஷ டி சில்வா உள்ளிட்ட எதிர்க்கட்சியினரோ பேசுவதில்லை.
கடந்த ஆண்டு செப்டெம்பர் முதல் டிசெம்பர் வரையான காலப்பகுதியில் வெளிநாட்டு கடன்களைச் செலுத்தும் அதிகாரம் இலங்கை மத்திய வங்கியின் வசமே காணப்பட்டது.
இந்தக் காலப்பகுதியில் மத்திய வங்கி ஆளுநரின் அனுமதியுடன்தான் ஆஸ்திரேலிய நிறுவனத்துக்குக் கட்டம் கட்டமாக ஏழு கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளன.
2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவையும் விசாரிக்க வேண்டும்.
அவருக்கு மாத்திரம் ஏன் சிறப்புச் சலுகை வழங்கப்படுகின்றது ? எனவே இந்த 2.5 மில்லியன் டொலர் மோசடி விவகாரத்தில் மத்திய வங்கியின் ஆளுநரையும் விசாரிக்க வேண்டும்.
2.5 மில்லியன் டொலர் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவையும் விசாரிக்க வேண்டும்.
அவருக்கு மாத்திரம் ஏன் சிறப்புச் சலுகை வழங்கப்படுகின்றது ? எனவே இந்த 2.5 மில்லியன் டொலர் மோசடி விவகாரத்தில் மத்திய வங்கியின் ஆளுநரையும் விசாரிக்க வேண்டும்.
![]()