கருத்துக்கணிப்புக்களில் தவெக தொடர் முன்னிலை…! அதிரும் தமிழக அரசியல் களம்

2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என Axis My India நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
இந்தநிலையில் நாடு முழுவதும் மே நான்காம் திகதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் பலப்பரீட்சை நிலவுகிறது.
குறிப்பாக, திமுக மற்றும் அதிமுக தலைமையிலான என்டிஏ (NDA) கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
இதனடிப்படையில் வாக்குப்பதிவு முடிவடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களது கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளன.
இதற்கமைய பெரும்பாலான தனியார் நிறுவனங்களின் கணிப்புகள், தற்போதைய ஆளுங்கட்சியான திமுக மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் எனத் தெரிவித்துள்ளன.
இந்தநிலையில் புகழ்பெற்ற Axis My India நிறுவனத்தின் கணிப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனடிப்படையில் 2026 தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என அந்த நிறுவனம் கணித்துள்ளது.
Axis My India கணிப்பின்படி, திமுக மற்றும் தவெக ஆகிய இரு கட்சிகளும் தலா 35 சதவீத வாக்குகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
![]()