இலங்கை

இலங்கையில் அநுரவை போன்று தமிழகத்தில் வரலாறு படைக்கப்போகும் விஜய்

இலங்கை அரசியலில் ஒரு சாதாரண பின்னணியில் இருந்து வந்து, பெரும் அரசியல் சக்திகளை வீழ்த்தி அநுர குமார திஸாநாயக்க எப்படி வரலாறு படைத்தாரோ, அதே போன்றதொரு மாற்றத்தைத் தமிழகத்தில் விஜய் ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த பாரம்பரிய கட்சிகளுக்கு மாற்றாக அநுர உருவெடுத்தது போலவே, தமிழகத்தில் திமுக – அதிமுக ஆகிய இரு அரசியல் வியூகத்தில் மாற்றம் ஏற்படும் என சர்வதேச பரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

அநுரவின் வெற்றிக்கு இளைஞர்களின் ஆதரவு எப்படி முதுகெலும்பாக இருந்ததோ, அதேபோல் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) இளைஞர்களையும், முதல்முறை வாக்காளர்களையும் குறிவைத்து களம் இறங்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஊழலற்ற நிர்வாகம் மற்றும் அடிப்படை மாற்றத்தை விரும்பும் மக்கள், அநுரவை அங்கீகரித்தது போல் விஜய்க்கும் ஒரு வாய்ப்பு வழங்கக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *