உலகம்

சீனா ஈரானுக்கு ராணுவ உதவியா?

ஈரான் மீது இஸ்ரேல் – அமெரிக்கா ஆகியவை இணைந்து கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி தாக்குதலை தொடங்கின. ஒரு மாத காலத்துக்குப் பின் இரு வார தற்காலிக போர்நிறுத்தம் அமலில் இருக்கிறது.

இதற்கிடையே, ஈரானுக்கு சீனா ராணுவ உதவி செய்வதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இந்தத் தகவலை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதன் அடிப்படையில் அமெரிக்கா வரி விதிப்பில் ஈடுபடுமானால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.

இதுதொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் எக்ஸ் பக்கத்தில்,

ஈரானுக்கு சீனா ராணுவ ரீதியிலான உதவிகளைச் செய்வதாக பல்வேறு ஊடகங்களிலும் தகவல் வெளியாகியுள்ளன. அந்தத் தகவல்களை அனைத்தும் சித்தரிக்கப்பட்டவை. இதன் அடிப்படையில் சீனா மீதான வரிகளை அமெரிக்கா அதிகப்படுத்தினால் சீனா தக்க பதிலடி தரும் என பதிவிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *