உலகம்

ரயில் பயணத்தை தவிர்க்குமாறு ஈரான் மக்களுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

ரயில் பயணத்தை தவிர்க்குமாறு இஸ்ரேலிய இராணுவம், ஈரான் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

ரயில்கள் மற்றும் ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் இருப்பது உயிருக்கு ஆபத்தானதாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் நேரப்படி இரவு 09 மணி வரை நாடு முழுவதும் ரயில் பயணத்தைத் தவிர்க்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தெஹ்ரான் தலைமையிலான அரசு, பல வாரங்களாக நாட்டின் இணைய சேவைகளை கட்டுப்படுத்தி வருவதால்,
பொதுமக்களுக்கு இத்தகைய எச்சரிக்கைகள் சென்றடைவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

எனினும், வெளிநாடுகளில் இருந்து செயல்படும் பாரசீக மொழி செயற்கைக்கோள் ஊடகங்கள் மூலம் இந்த தகவல்கள் வெளிவருவதாகவும்
கூறப்படுகிறது

மத்திய கிழக்கில் கடந்த ஐந்து வாரங்களாக நீடித்து வரும் போரின் பின்னணியில், இன்று அதிகாலை இஸ்ரேல், ஈரான் மீது புதிய தாக்குதல்களை மேற்கொண்டதாகவும், அதற்கு பதிலடியாக ஈரான், இஸ்ரேலும் அதன் வளைகுடா அண்டை நாடுகளும் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *