ராஜபக்சக்களின் பெயர் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது

ராஜபக்சக்களின் பெயர் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ராஜபக்சகளின் பெயர் இன்றி எதிர்த்தரப்பினருக்கு அரசியல் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது என சுட்டிக்காட்டி உள்ளார்.
ராஜபக்சக்களின் பெயர் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது | Anura Should Understand The Truth
முன்பு பதவி வகித்த ஜனாதிபதிகளை போன்று தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் தற்பொழுது ஒரு விடயத்தை புரிந்து கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
ராஜபக்சகளுக்கு அப்பால் பல்வேறு விடயங்கள் இருக்கின்றன என்பதை அவர் தற்பொழுது புரிந்து கொண்டிருப்பார் என குறிப்பிட்டுள்ளார்.
உலக சந்தை என்ற ஒரு விடயம் இருக்கின்றது என்பதை அநுர புரிந்து கொண்டுள்ளமை மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இப்போதாவது வாய்க்கு வந்த விடயங்களை கூறாது கடந்த காலங்களில் லம்போகினி, தங்க குதிரை போன்ற பல்வேறு கதைகளை கூறியது போன்று செயல்படாது சரியான முறையில் நடவடிக்கைகளை முன்னெடுத்தால் நன்றாக இருக்கும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
![]()