உலகம்
ஈரானில் அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களால் 90,063 வீடுகள், 307 மருத்துவமனைகள் 760 பாடசாலைகள் பலத்த சேதம்

ஈரான் மீதான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள சேத விபரங்களை ஈரான் செம்பிறை சங்கம் (Iranian Red Crescent) வெளியிட்டுள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களில் பொதுமக்களின் குடியிருப்புக்கள் மற்றும் அத்தியாவசிய பொதுக் கட்டமைப்புக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 90,063 வீடுகள் மற்றும் குடியிருப்புக்கள் சேதமடைந்துள்ளன.307 மருத்துவமனைகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.அத்துடன், 760 பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.
ஈரான் முழுவதும் பரவலாக முன்னெடுக்கப்பட்ட இந்தத் தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் கல்வி மற்றும் சுகாதார சேவைகள் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாக ஈரான் செம்பிறை சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
![]()