உலகம்

அவுஸ்திரேலியாவில் கடும் எரிபொருள் நெருக்கடி – விக்டோரியாவில் ஏப்ரல் முழுவதும் இலவச பொதுப் போக்குவரத்து

அவுஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எரிபொருளின் விலை, விட சுமார் 85% வரை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், விக்டோரியா மாநில மக்கள் பயன்பெறும் வகையில் ஏப்ரல் மாதம் முழுவதும் பொதுப் போக்குவரத்து இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனூடாக மக்கள் அதிகமாக பஸ், ரயில், டிராம் போன்றவற்றைப் பயன்படுத்த ஊக்குவித்து, எரிபொருள் தேவையை குறைக்க உதவும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

மக்கள் தேவையற்ற அளவில் சேமித்து வைத்தமையே எரிபொருள் பற்றாக்குறைக்கு காரணம் என கூறப்படுகின்றது.

ஆனால், விநியோகத்தில் பாதிப்பு இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுபோன்றே, குயின்ஸ்லாந்தில் முன்பே குறைந்த கட்டண பொதுப் போக்குவரத்து திட்டம் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.

விக்டோரியாவில் இந்த இலவச சேவை தற்காலிகமாக மட்டுமே இருக்கும் என்றும், இதற்காக சுமார் 70 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் செலவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *