இந்தியா

தி.மு.க 175 தொகுதிகளில் உதய சூரியன் சின்னத்தில் ஸ்டாலின் போட்டி

“2026 சட்டப் பேரவைத் தேர்தல் களத்தில், 175 இடங்களில் உதயசூரியன் களம் காண்கிறது. திமுக கூட்டணியில் ஏதாவது விரிசல் ஏற்படாதா, பிளவு உருவாகாதா என நினைத்த சதிகாரர்களின் எண்ணங்கள் தவிடுபொடியானது.

உதயசூரியனும் நமது சின்னம்தான். கை, முரசு, கதிர் அரிவாள், அரிவாள் சுத்தி நட்சத்திரம், பானை, ஏணி ஆகியவையும் நமது சின்னங்கள்தான். 234 தொகுதிகளும் நம்முடைய தொகுதிகள்தான். தோழமைக் கட்சிகளுடன் இணைந்து நின்று, விரைந்து பணியாற்றுவீர். கவனம் சிதறாது இலக்கை வெல்வோம்” என திராவிட முன்னேற்றக் கழகத் (தி.மு.க) தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *