உலகம்

கண்ணீர்க் கடலில் டெஹ்ரான் ; அலி லாரிஜானியின் இறுதி ஊர்வலத்தில் திரண்ட இலட்சக்கணக்கான மக்கள்

இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் தேசிய பாதுகாப்புச் செயலாளர் அலி லாரிஜானியின் இறுதி ஊர்வலம் டெஹ்ரான் நகரில் மாபெரும் மக்கள் வெள்ளத்தின் மத்தியில் மிகவும் உணர்ச்சிகரமான முறையில் நடைபெற்றது.

ஈரானின் ‘மூளை’ என வர்ணிக்கப்பட்ட ஒரு மாபெரும் இராஜதந்திரியை இழந்த சோகத்தில், டெஹ்ரான் வீதிகளில் இலட்சக்கணக்கான மக்கள் கண்ணீர் விட்டு அஞ்சலி செலுத்தினர்.

துக்கப் பாடல்களும், மத முழக்கங்களும் ஒலிக்க நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், ஈரானிய மக்கள் நெஞ்சில் அடித்துக்கொண்டு தங்களது சோகத்தை வெளிப்படுத்திய காட்சி காண்போரை உலுக்கும் வகையில் அமைந்திருந்தது.

முன்னாள் மாவீரர்களான காசிம் சுலைமானி போன்றவர்களின் வரிசையில் தற்போது லாரிஜானியும் இணைந்துவிட்டதாகத் துக்கப் பாடல்கள் இசைக்கப்பட்டன.

இந்த இறுதி ஊர்வலம் வெறுமனே துக்கத்தை மட்டும் வெளிப்படுத்தவில்லை; மாறாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான மாபெரும் கோபத்தின் வெளிப்பாடாகவும் அமைந்திருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *