இந்தியா

ரஜினியை மிரட்டலாம்; விஜய்யை மிரட்ட முடியாது: ஆதவ் அர்ஜூனா

ரஜினிகாந்த் அவர்களை அரசியலுக்கு வரவிடாமல் தடுத்தது திமுக தான் என ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

சாதிவாரி கணக்கெடுப்பு, சட்டம் ஒழுங்கு, விஜய் பிரசாரத்திற்கு தடைபோதும் திமுக என மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி தவெக சார்பில் ஆர்ப்பட்டம் நடைபெற்றது.

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஆதவ் அர்ஜூனா, எம்ஜிஆருக்கு பின்னர் ரஜினி பிரபலமான தலைவராக மாற நினைத்தார், ஆனால் திமுக குடும்பம் ரஜினிக்கு பல மிரட்டல்கள் கொடுத்து அரசியலுக்கு வரவிடாமல் செய்து விட்டனர், ஆனால் எந்த மிரட்டல் வந்தாலும் அஞ்சாமல் இருப்பர் தலைவர் விஜய், திமுக பல இன்னல்களை கொடுத்தும் அரசியலில் இருந்து பின்வாங்கவில்லை என தெரிவித்தார்.

மேலும் திமுக பற்றி கடுமையாக விமர்சித்த வைகோ, தொல்.திருமாவளவன் திமுகவிலேயே ஐக்கியமாகிவிட்டதாகவும், கட்சி தொடங்கிய காலத்தில் திமுக-வை விமர்சித்த கமல்ஹாசனும் திமுகவில் இணைந்துவிட்டதாக தெரிவித்தார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *