உலகம்

ஈரானுக்கு எதிரான போர் ; அமெரிக்காவுக்கு ஏற்பட்ட செலவு

ஈரானுக்கு எதிரான போரின் முதல் ஆறு நாட்களில் அமெரிக்காவிற்கு குறைந்தபட்சம் 11.3 பில்லியன் அமெரிக்க டொலர் செலவினம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாக அதிகாரிகள் இந்த வாரம் நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது மதிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செனட்டர்களுக்கான செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மூடிய கதவு விளக்கக் கூட்டத்தில் வழங்கப்பட்ட இந்தத் தொகையில், போரின் முழுமையான செலவுகள் சேர்க்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இருப்பினும், மோதல் குறித்து மேலதிக தகவல்களைக் கோரி வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

போருக்கான கூடுதல் நிதியுதவியைக் கோரும் கோரிக்கையை வெள்ளை மாளிகை விரைவில் காங்கிரஸிடம் சமர்ப்பிக்கும் எனப் பல நாடாளுமன்ற உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கோரிக்கை 50 பில்லியன் டொலராக இருக்கலாம் எனச் சில அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், மற்றவர்கள் அந்த மதிப்பீடு குறைவாகத் தெரிவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *