உலகம்
போர் தொடர்பான ஸ்டார்மரின் நிலைப்பாடு தெளிவற்றது – எதிர்க்கட்சிகள் விசனம்

பிரதமர் ஸ்டார்மரின் ஈரான் போர் தொடர்பான பிரித்தானியாவின் நிலைப்பாடு தெளிவற்றது என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
பாராளுமன்றத்தில் எம்.பிக்கள் இன்று பிரதமரிடம் கேள்விகள் கேட்கும் நேரத்தில், மத்திய கிழக்கு போர் விவகாரம் முக்கியத்துவம் பெற்றது.
இதேவேளை, கன்சர்வேடிவ் தலைவர் கெமி பேடெனோக் (Kemi Badenoch) ஆரம்பத்தில் அமெரிக்காவுடன் இணைந்து ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்த வேண்டும் என்று கூறியதாக தெரிவித்த பிரதமர் பின்னர் அவர் அந்த நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கினார் என்றும் குற்றம் சுமத்தினார்.
இந்நிலையில், பொதுமக்களின் கருத்துடன் தன்னுடைய நிலைப்பாடு ஒத்துப்போகிறது என்பதை அரசாங்கம் வலியுறுத்த முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.
![]()