இந்தியா
இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் கொலை; உறவினர்கள் சாலை போராட்டம்.!

கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதி முகாமில் வசித்து வந்த சிவக்குமார் என்ற இலங்கை தமிழர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையை செய்துவிட்டு தப்பியோடிய நபர்களின் வீட்டை கொளுத்திய உயிரிழந்த சிவக்குமாரின் உறவினர்கள்.
அதனைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் முகாமில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுளளதுடன் பலத்த பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்குள்ள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கொலைச் சம்பவத்தினை கண்டித்து கும்மிட்டிப்பூண்டி இலங்கை தமிழ் முகாம் மக்கள் தேசிய நெஞ்சாலையினை மறித்து சாலை மறியல் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
![]()