குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம், சர்வதேச வானூர்தி நிலையம் மீது தாக்குதல்!

குவைத்தில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ முகாமான ‘அரிப்ஜான்’ (Arifjan) தலைமையகத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மிகவும் துல்லியமாக இலக்குகளைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் இராணுவம் புதிய பதிலடித் தாக்குதல் தொடர் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
இந்த புதிய தாக்குதலானது “உண்மை வாக்குறுதி” நடவடிக்கையின் 27 ஆவது அலை என ஈரான் இராணுவம் பெயரிட்டுள்ளது.
இதேவேளை குவைத் சர்வதேச வானூர்தி நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கிகள் மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதன்போது எரிபொருள் தாங்கிகள் தீக்கிரையாகியுள்ளன.
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள எரிபொருள் தாங்கிகள் மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குவைத் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இன்று அதிகாலை வானூர்தி நிலைய வளாகத்தில் உள்ள எரிபொருள் களஞ்சிய முனையத்தை இலக்கு வைத்து இந்த ஆளில்லா வானூர்தி தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தாக்குதலினால் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் சம்பவ இடத்தில் தீவிரமாகப் பணியாற்றி வருவதாக குவைத் அரசாங்கம் தனது x தளத்தில் தெரிவித்துள்ளது.
![]()