“IRIS Dena ஒரு போர் இலக்கு”; ஆயுதமற்றது என்ற ஈரானின் வாதத்தை மறுத்தது அமெரிக்கா

இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் மூழ்கடிக்கப்பட்ட ஈரானியப் போர்க்கப்பலான IRIS Dena, தாக்குதலின் போது ஆயுதமற்ற நிலையில் இருந்ததாகக் கூறப்படுவதை அமெரிக்கா முற்றாக மறுத்துள்ளது.
சர்வதேச சட்டங்களின்படி அந்தப் போர்க்கப்பல் ஒரு முறையான இராணுவ இலக்கு (Legitimate Military Target) என்றும் அமெரிக்கத் தரப்பு விளக்கமளித்துள்ளது.
ஒபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) நடவடிக்கையின் கீழ், ஈரானிய இராணுவச் சொத்துக்கள் அனைத்தும் இலக்கு வைக்கப்படுவதாக அமெரிக்கா முன்னரே எச்சரித்திருந்தது.
சர்வதேச கடல்சார் சட்டங்களின்படி, ஒரு நாட்டின் போர்க்கப்பல் அதன் ஆயுதங்களைப் பயன்படுத்தாத நிலையில் இருந்தாலும், போர்ச் சூழலில் அது ஒரு தற்காப்பு அல்லது தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட இராணுவ இலக்காகவே கருதப்படும் என அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
ஈரானியத் தரப்பு இந்தக் கப்பல் ‘அமைதி நோக்கம்’ கொண்டது எனக் கூறிய போதிலும், அதன் தொழில்நுட்பத் திறன் அமெரிக்கப் படைகளுக்கு அச்சுறுத்தலாக இருந்ததாகப் பென்டகன் தெரிவித்துள்ளது.
![]()